அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி.

·         வேலூர்  மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வியில் வழிகாட்டும் என் கல்லூரி கனவு எனும் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி.

                வேலூர் மாவட்டத்தில்  அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வியில் வழிகாட்டும் என் கல்லூரிக் கனவு எனும் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை    மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி இன்று (25.04.2024) வி..டி. கல்லூரி அண்ணா கலையரங்கில்  தொடங்கி வைத்தார்.

                ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி பயில வழிகாட்டும்  நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

                நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு முடித்த பிறகு உயர் கல்வியில் எந்த துறையில் சேரலாம் என்பது குறித்து  அறிந்து கொள்ளும் வகையில்  என்  கல்லூரிக் கனவு எனும்  உயர்கல்வி  வழிகாட்டல்  நிகழ்ச்சி  மக்கள்  மறுமலர்ச்சி  திட்ட தனியார் நிறுவனத்துடன் இணைந்து இன்று வி.ஐ.டி. அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.

                இவ்வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்து   மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் இது போன்ற உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று உயர் கல்வியில் நல்ல பாடத்திட்டங்களை தேர்வு செய்து  தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொள்ள வேண்டும்.

                பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வேண்டும் என்றும், அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்கள். பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு 12-ம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்வியில் என்ன படிக்க வேண்டும் என்பதற்கு ஆலோசனை வழங்குவதில்லை. எனவே தான் அரசின் சார்பில்  சிறந்த வல்லுநர்களை கொண்டு இதுபோன்ற உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

                மேலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி சேர்ந்த பிறகு ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை தவறாமல் கடைபிடித்து எந்த ஒரு தவறான எண்ணங்களுக்கு உட்படாமல்  கல்வியில்  கவனம்  செலுத்த  வேண்டும் என  தெரிவித்தார்.

                இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்  மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் படிப்புகள் சட்ட படிப்பு, கலை மற்றும் அறிவியல் படிப்புகள், மீன் வளம் சார்ந்த படிப்புகள், பாரா மெடிக்கல் படிப்புகள், மத்திய மற்றும் மாநில கல்வி நிறுவனங்களில் உள்ள டிப்ளோமா படிப்பதற்கான வாய்ப்புகள், வேளாண் படிப்புகள் மற்றும் கால்நடை அறிவியல் படிப்புகள் ஆகியவற்றை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், அத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், துறை சார்ந்த வல்லுநர்கள் மூலம் விரிவாக  எடுத்துரைக்கப்பட்டது.

             இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் வருவாய்  கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி,  மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இராமசந்திரன் மற்றும் மக்கள் மறுமலர்ச்சி திட்ட செயலாளர்  சி.பலராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.