• இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படிவெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்

·        இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படிவெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் - வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்
வே. இரா. சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 23.04.2024 நாளிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,  காஞ்சிபுரம்,  திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,  சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 23.04.2024 மற்றும் 24.04.2024 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், வெயிலின் தாக்கத்தினால் உடல் நலக்குறைவு ஏற்பட்டால்  உடனடியாக மருத்துவரை அணுகுமாறும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.