• வேலூர் மாவட்டத்தில் ”புதுமைப்பெண்” திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை.

·         வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர் கல்வியில் சேரும்போது கல்லூரி நிர்வாகம் அம்மாணவியரை புதுமைப்பெண்   திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை செய்தல் அவசியம் - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர்.

            தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் புதுமைப்பெண் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் உயர்கல்வி முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தால் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளில் உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம்   8,478  மாணவிகள் மாதம் 1,000/- ரூபாய் பெற்று வருகின்றனர்.  இந்த மாணவிகள் ஏற்கனவே பிறகல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

                கடந்து ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெற்றனர். இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்ட புதிய அரசாணை எண்.16  11.03.2024  நாளிட்ட  அரசாணையில்,  வரும் கல்வியாண்டு முதல்  புதுமைப்பெண் என்ற இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் பயின்ற மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது கல்லூரி நிர்வாகம் அம்மாணவியரை இத்திட்டத்தில் சேர்த்து பயன்பெற வழிவகை செய்தல் அவசியம் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.