• வேலூரில் உலக சுற்று சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்.

 ·         வேலூரில் உலக சுற்று சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சிகள்.

     வேலூர் மாவட்டம், வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகில் ஜி.கே. உலக பள்ளி மூலம் வனத்திருவிழா என்றழைக்கபடும் வான் மஹோத்சவ்  நடைபெற்றது. இதில் ஜி.கே. பள்ளி மாணவர்கள் அண்ணா கலையரங்கம் முதல் பழைய பேருந்து நிலையம் வரையில் பள்ளியின் முதல்வர் ராம்குமார் தலைமையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்திய வண்ணம் பழைய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

     காடுகளை அழிக்க கூடாது. மரங்களை வளர்க்க வேண்டும். காடு அழிந்தால் விலங்குகள் அனைத்தும் குடியிருப்பு பகுதியில் வந்துவிடும். மரம் வளர்ப்பதால் மழை கிடைக்கும். தூய்மையான காற்று கிடைக்கும். எனவே மரங்களை வெட்ட கூடாது. பறவைகள் விலங்குகளை பாதுக்காக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

     தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தில் காடுகளை பாதுகாக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதேபோன்று காட்பாடியிலும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.