• வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

         வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் நியமனம் செய்ய விண்ணப்பபங்கள் வரவேற்கபடுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

                வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அதுவரையில் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத் தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் கல்வி நலன் கருதி அவர்களை பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார் செய்தவற்கு ஏதுவாகவும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 18-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்த ஆணை வரப்பெற்றுள்ளது.

                பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18000/- மாத தொகுப்பூதியத்தில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.

 பணி நியமனத்திற்கான வழிகாட்டும் நெறிமுறைகள்;

ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிடும்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்பட வேண்டும்.

               பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி வாய்ந்த பணி நாடுநர் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட விவரம்:

 அ.ஆதிந.மே.நி.பள்ளி, பில்லாந்திப்பட்டு, 1. வேதியியல்பாடம்

கல்விதகுதி / வயது

                முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றபட வேண்டும்.

     பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

                விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவே அல்லது அஞ்சல் மூலமாக உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 05.07.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.