• வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் ஜுன் 2024 ஆம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் ஜுன் 2024-ஆம் மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் உரிய துறை அலுவலர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் தமிழ்நாடு அரசின் முதல்வரின் முகவரி துறை சார்பில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் வேலூர் மாவட்டத்தில் வரும் 11.07.2024 முதல் 14.08.2024 வரையில் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற உள்ளதால் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முகாம் நடைபெறும் இடங்களில் அளித்து பயன்பெற கேட்டு கொள்ளப்பட்டது.

 வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் பி.எம் கிசான் திட்டத்தில் புதிய பதிவு செய்யும் பயனாளிகள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும், ஏற்கனவே பதிவு மேற்கொண்டு தொகை வராமல் நிலுவையில் உள்ள பயனாளிகள் விடுப்பட்டுள்ள பதிவுகளை எவ்வாறு மேற்கொண்டு இத்திட்டத்தில் பயன் பெறலாம் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

 அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண்மைத் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மணிலா விதைகள் தட்டுப்பாடு உள்ளதை நிவர்த்தி செய்து அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் விநியோகம் செய்தல், அணைக்கட்டு மற்றும் காட்பாடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை புணரமைத்திட  வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

                தோட்டக்கலைத் துறையின் மூலம் சிவப்பு எறும்புகளை கட்டுபடுத்துதல், வேலூர் மாவட்டத்தில் மா சாகுபடி குறைவாக உள்ளதால் உரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடியினை உயர்த்திட விவசாயிகளுக்கு பயிற்சிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

                வேளாண் வணிகத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் மாம்பழ சாறு தயாரிக்கும் நிறுவனம் துவங்கிட உரிய துறை  நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

கூட்டுறவு துறையின் மூலம் நகைக் கடனுக்கான வட்டியின் சதவீதம் அதிகமாக உள்ளதை குறைத்திட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

நீர் ஆதாரத் துறையின் மூலம் ஒழையாத்தூர் ஏரிகால்வாய் தூர் வாருதல், பத்தலபல்லி மலட்டாறு குறுக்கே அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

போக்குவரத்து துறையின் மூலம் மேல்அரசம்பட்டு – வேலூர் வரையில் சீரான இடைவெளியில் பேருந்து இயக்கிட வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

ஊராட்சியின் மூலம் மாட்டு கொட்டகை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

மின்சாரத் துறையின் மூலம் ஒழையாத்தூர், தெள்ளூர்  செஞ்சி மற்றும் ஜிஆர் பாளையம் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைத்திட  நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டது.

                இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தபாலா, இணைஇயக்குநர் (வேளாண்மை) திரு.சோமு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐப்பதுரை, மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர்  ராமதாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியார் (வேளாண்மை) தேன்மொழி, வருவாய் கோட்டாட்சியர்கள் இரா.க.கவிதா, செல்வி சுபலட்சுமி மற்றும்  அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.