• மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த 8 மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம், பராமரிப்பு தொகை, வாரந்தோறும் நடத்தப்படும் மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் குடியிருப்பு, வேலூர் அறிவியல் பூங்காவில் சாய்தளி வசதி, அனைத்து இசேவை மையங்களிலும் சாய்தள வசதி, வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பாதிப்பு சதவீதத்தை உயர்த்துதல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றம் செய்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சார்பில் வீடு இல்லா மாற்றுத் திறனாளிகள் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடுகளை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.06.2024 வரை என்பதை நீட்டிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் வீடுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்க வருகின்ற 05.07.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
எனவே இத்திட்டத்தில் வீடுகளை பெற விருப்பமுள்ள மாற்றுத் திறனாளிகள் 0416-2222737,0416-2902737 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது வேலூர் அண்ணா சாலையில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாக தொடர்பு கொண்டோ விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்தனித்துணைஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கலியமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜமால்மொய்தீன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment