• வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல்.

  • வேலூர் மாவட்டத்தில் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள 18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாம்.

                         வேலூர்  மாவட்டத்தில் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்துள்ள 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான பராமரிப்பு தொகை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார்.

         மாற்றுத் திறனாளிகள் வருவாய்த் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1500/- பெற குறைந்தபட்ச வயது 18 என அரசால் வரையறுக்கப்பட்டுள்ளது.

                     இத்தகைய நலிவுற்ற மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 18 வயதிற்கு குறைவான வருவய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஒய்வூதியம் வழங்கிடும் பொருட்டு மாவட்ட அளவிலான வயது-வரம்பு தளர்த்தும் குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.

                       இக்குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட சமூக நல அலுவலர், அரசு மருத்துவர் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஆகியோர் உறுப்பினராகவும் உள்ளனர்.

                     இக்குழு பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளியின் வயது வரம்பினை தளர்த்தி உத்திரவிடப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் முதுநிலை அடிப்படையில் மாற்று திறனாளி ஓய்வூதியம் வழங்கப்படும்.

                        வேலூர்  மாவட்டத்தில் 142 மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து ஓய்வூதியம் வேண்டி மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இந்த 142 மாற்றுத் திறனாளிகள் இன்று காயிதே மில்லத் கூட்டரங்கில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை பெறும் மாற்றுத் திறனாளிகளில் தகுதியுடைய நபர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ்  மாதந்தோறும் ரூ.1500/- ஓய்வூதியம் வழங்கப்படும்.     

மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு தொகை ரூபாய் 2000 பெற விண்ணப்பித்துள்ள குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தெரிவித்தார்.

                       இம்முகாமில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கலியமூர்த்தி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. பாலச்சந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்  சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.