• வேலூரில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

·         பெண் ஆசிரியர்களை பாதிக்கும் 243 அரசாணை இரத்து செய்யக்கோரி தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலூரில் ஆர்ப்பாட்டம்.

            வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

                இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து நிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைப் பறிக்கின்ற, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அரசாணை 243- வெளியிட்டு தொடக்கக் கல்வித் துறையில் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாக்கியுள்ள கல்வித் துறையைக் கண்டித்தும்,

     அறிவிக்கப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வினை இரத்து செய்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்த வேண்டும். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரை பலமுறை சந்தித்து அரசாணை 243- இரத்து செய்ய வலியுறுத்தியபோதும் அதனை பொருட்படுத்தாது 243 அரசாணையை பின்பற்றி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்தும் மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

           தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், கீதா, ஆர்.ராஜன், சரவணன், கோட்டீஸ்வரன் ஆகியோர் கூட்டுத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர்  ஜனார்த்தனன், தொடக்கப்பட்ட ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  சுதாகரன் ஆகியோர் கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

பேட்டி: ஜோசப்  அன்னய்யா (  உயர் மட்ட குழு உறுப்பினர்).

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.