• வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 01.08.2024 மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

·        வேலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வருகின்ற 01.08.2024 அன்று வேலூர்  ஊராட்சி ஒன்றியத்தில்  நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித் தலைவர் .

                வேலூர் மாவட்டத்தில்  ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர்  திட்ட முகாம் 11.07.2024 முதல் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் 14.08.2024 வரை நடைபெறவுள்ளது. இந்த  மக்களுடன் முதல்வர் முகாம்களில் பொதுமக்களுக்கு  15 துறைகளிலிருந்து 44 சேவைகள் வழங்கப்படவுள்ளது.

 அதன்படி 01.08.2024 வியாக்கிழமை அன்று வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில்  பாலமதி ஊராட்சியை சார்ந்த பொதுமக்களுக்கு  பாலமதி கிராமத்தில் குழந்தை வேலாயுதர் மகாலில் ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.

                      எனவே வேலூர் மாவட்டத்தில்  ஊரக பகுதிகளில்  ‘01.08.2024 அன்று வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில்  நடைபெறவுள்ள மக்களுடன் முதல்வர் முகாமில்  பொதுமக்கள் 15 துறைகளை சார்ந்த  தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வுகாணுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.