• வேலூர் மாவட்டத்தில் 36,042 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயன்.

·         வேலூர்  மாவட்டத்தில் 707 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 36,042 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது.  இதனை மனதில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 07.05.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விதி 110ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார்.

            மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஊரக பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 2.50 இலட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் வரும் கல்வி ஆண்டு முதல் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.

அதன்படி, பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த திட்டத்தினை விரிவுபடுத்தி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.07.2024 அன்று திருவள்ளுர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 510 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஊரக பகுதிகளில் உள்ள 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 577 பள்ளிகளில் பயிலும் 27,930 மாணவ, மாணவிகள், 85 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5789 மாணவ, மாணவிகள், 21 நகராட்சி பள்ளிகளில் பயிலும் 1381 மாணவ, மாணவிகள், 24 பேரூராட்சி பள்ளிகளில் பயிலும் 1094 மாணவ, மாணவிகள் என மொத்தம் 707 பள்ளிகளில் பயிலும் 36,042 மாணவ, மாணவிகள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி,  தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.