• வேலூரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

 ·        வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம்  மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

     வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் கூட்டமைப்பின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

     இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு அமைப்புசாரா ஆட்டோ தொழிலாளர் நலவாரியத்தின் உறுப்பினர் ஆர்.டி.பழனி துவங்கி வைத்தார்.

            தற்போது கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ.1200-5000/-ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

     நலவாரியத்தில் பதிவு பெற்றவர்கள் 60 வயதிற்கு மேல் இருந்தாலும் இயற்கை மரண உதவி தொகையை அவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும். நலவாரியத்திற்கு என தனி வங்கியை துவங்கி அதன் மூலம் பண பலன்களை தொழிலாளர்களுக்கு வழங்கவும், பணப்பயன் பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரியம் மூலம் குறுஞ்செய்திகளை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். மேலும் 60 வயது பூர்த்தியடைந்த தொழிலாளர்கள் விண்ணப்பிக்கும்  தேதியிலிருந்து நிலுவை தொகையினை முழுமையாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டமானது நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

     இந்த ஆர்பாட்டத்தில் நிர்வாகிகள் உமாசங்கர், மணிமேகலை, தாமோதரன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.