• வேலூர் மாவட்ட மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்.

·        வேலூர்  மாவட்ட மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை வேளாண்மைத்துறை, காவல்துறை. ஊரக வளார்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித்துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 180  மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்று கொண்டார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் வ.மு.சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Comments