• வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்.

 ·        வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மூன்று  நாட்களுக்கு முன்பாக பிறந்த ஆண் குழந்தை கடத்தல்.

       வேலூர் மாவட்டம், வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேர்ணாம்பட்டு அரவட்லா மலை கிராமத்தை சார்ந்த சின்னி (வயது 20) கணவர் பெயர் கோவிந்தன் என்பவர் சென்ற 27-ஆம் தேதி இரவு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அன்று இரவே சுமார் மணியளவில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 28-ஆம் தேதி காலை பிரசவ வார்டிற்கு மாற்றப்பட்டு  சிகிச்சையில் இருந்தார்.

            இன்று காலை சுமார் 8 மணி அளவில் பெண் ஒருவர் குழந்தையின் பாட்டியிடம் உணவு பொட்டலத்தை கொடுத்து சாப்பிட   சொல்லிவிட்டு அக்குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். பட்டப் பகலில் மக்கள் நடமாட்டமுள்ள நேரத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை கடத்தல் சம்பவத்தால் மருத்துவமனை நுழைவாயில் மூடப்பட்டு கார் இருசக்கர வாகனங்கள் மக்கள் கொண்டு செல்லும் குழந்தைகள் கைப்பைகள் சோதனை செய்கின்றனர். போலீசார் பிரசவ வார்டில் விசாரணை   மேற்கொண்டுள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டும் விசாரணை செய்து வருகின்றனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.