• தென்மேற்கு பருவமழை - பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும்

 தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் காய்ச்சல் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும் மாவட்டஆட்சித் தலைவர்.

தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு, வைரஸ் ஆகிய தொற்று நோய்கள் பரவகூடிய நிலையில் இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்துமாறும் மற்றும் சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் நகர்புற அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

மேலும் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தால் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். எனவே ஆட்டுக்கல், சிமெண்ட் தொட்டிகள், டயர், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள், கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பூந்தொட்டிகள் குறிப்பாக குளிர்சாதன பெட்டியின் பின்புறம் ஆகியவற்றை நீர் தேங்காமல் பார்த்து கொள்ளவும் மற்றும் அவற்றை அப்புறப்படுத்தவும் வேண்டும்.

தண்ணீர் தேக்கம் இருக்கும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் மீது பொது சுகாதார சட்டம் 1939 ன்படி அபராதம் விதிக்குமாறு சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட இப்பணிகளை ஆய்வு செய்ய மாவட்டத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும் குழு (RRT)  ஏற்படுத்தப்பட்டு தினமும் ஆய்வு செய்யப்படுகிறது. இதுதவிர மாநகராட்சி அளவில் இளநிலை பூச்சியல் வல்லுநர் (JE), பொது சுகாதார மேலாளர் (PHM) மற்றும் 15 சுகாதார ஆய்வாளர்கள் (HIS) 4 மண்டலங்களிலும் தீவிர டெங்கு காய்ச்சல் மற்றும் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட அளவில் 521 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடமாடும் மருத்துவக் குழு (MMU)  மற்றும் தேசிய குழந்தைகள்  நலக் குழு (RBSK)  ம் சேர்ந்து தினமும் காய்ச்சல் உள்ள இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு மருத்துவ உதவி செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இம்முகாம்கள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் சுயமாக மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் பொதுமக்கள் கழிவறையை பயன்படுத்திய பின்பும், வெளியில் இருந்து வீட்டிற்கு வரும்போதும் மற்றும் உணவு உண்பதற்கு முன்பும், பின்பும் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதன்மூலம் நோய் வருவதை தடுக்க முடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.