• வேலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.

 ·        வேலூரில் மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்காத பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்.

    வேலூர், அண்ணாகலையரங்கம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் டீக்காராமன் தலைமையில் மத்திய பட்ஜெட்டில் பாஜக அரசு தமிழகத்திற்கும் மற்ற இந்தியா கூட்டணி மாநிலங்களுக்கும் போதுமான நிதியை ஒதுக்கவில்லை.

    இதனை கண்டித்தும் தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி மத்திய அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் சிறுபான்மை பிரிவு தலைவர் வாகீத்பாஷா மற்றும் எஸ்.சி.எஸ்டி துறை மாநில செயலாளர் சித்தரஞ்சன் உள்ளிட்ட திரளான காங்கிரஸ் கட்சியினர் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.