• வேலூரில் கண் தான விழிப்புணர்வு.

 ·         வேலூரில் கண் தான விழிப்புணர்வு - கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்.

                வேலூர் மாவட்டம், வேலூரில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஊரீசு கல்லூரி இணைந்து தேசிய கண் தான தினத்தை முன்னிட்டு கண் தான விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் கண் தானத்தின் அவசியம் குறித்த கூட்டமும் பேராசிரியர் திருமாறன் தலைமையில் நடைபெற்றது.

     இதில் எம்பெருமாள் கோபிநாத், டாக்டர் ஐசக் அபிரகாம்ராய், மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கி நகரின் முக்கிய வீதிகளான அண்ணாசாலை, ஆரணி சாலையின் வழியாக மீண்டும் ஊரீசு கல்லூரியை அடைந்தது.

     இதில் எல்லா வயதினரும் கண் தானம் அளிக்கலாம். இதன் மூலம் பார்வையற்றோர் எண்ணிக்கை குறையும். இறந்தவர்களும் கண் தானம் செய்யலாம் ஆகியவைகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.