• வேலூர் ஊரிஸ் கல்லூரி சந்தை.
- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலூர் ஊரிஸ் கல்லூரி இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் கல்லூரி சந்தை - வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வேலூர் ஊரிஸ் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரிஸ் கல்லூரி இணைந்து நடத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்திடும் கல்லூரி சந்தையை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கு 3 கல்லூரி சந்தைகள் நடத்திட இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஊரிஸ் கல்லூரியில் இக்கல்லூரி சந்தை 23.08.2024, 24.08.2024 நடைபெறவுள்ளது.
இக்கல்லூரி சந்தையில் மகளில் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் உணவு பொருட்கள், அலங்கார நகைகள், கைவினைப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பனையோலை பொருட்கள், சுடும்மண் பொருட்கள், சிறுதானிய பொருட்கள் போன்றவை கல்லூரி மாணவர்கள் பார்வைக்கும் மற்றும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், உதவி திட்ட அலுவலர் சே.தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ஊரிஸ் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே,அனிகமலா புளோரன்ஸ் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment