• வேலூர் வி.ஐடி-யில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.

·         வேலூர் வி.ஐடி-யில் தமிழியக்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா.

                வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வி.ஐடி வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் தமிழியக்கம் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் இணைந்து முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பல்கலைகழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது.

     இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

     முன்னதாக கலைஞர் கருணாநிதியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இவ்விழாவில் கலைஞருடன் பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் திரளான தமிழறிஞர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

                இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து பேசுகையில்,

     நான் இருவருக்கும் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமென்றால் என்னவாக இருக்க வேண்டுமென தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஒரு நகைச்சுவை சொன்னார். நேற்று இவர் ஒரு நகைச்சுவையை சொன்னார். இரண்டும் சேர்ந்து இதுதான் நகைச்சுவை என்ற உச்சத்திற்கு வந்துவிட்டது.

           துரைமுருகன் சொல்லியிருக்கிறார், நாங்கள் நகைச்சுவையாக பேசினோம் நீங்கள் ஏன் பகைச்சுவையாக பார்க்கிறீர்கள் என்று. பழம் பாடல் ஒன்று உண்டு. அதுதான் ரஜினி அவர்களுக்கும், துரைமுருகன் அவர்களுக்கும் இன்று நிகழ்ந்துள்ளது. உங்கள் பகை கல்லில் விழுந்த பிளவா? தங்க தட்டில் விழுந்த பிளவா? கல்லில் விழுந்த பிளவை ஒட்ட வைக்க முடியாது. தங்க தட்டில் கீறல் விழுந்தால் நெருப்பை காட்டினால் ஒட்டிவிடும். இரண்டு தங்கங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என வாழ்த்து தெரிவியுங்கள். பெரியவர்களின் நட்பு தண்ணீரில் அம்பு கிழித்ததை போல் அந்த அம்பு கிழித்த தடம் காணாமல் போவதை போல் வம்பு கிழித்த தடம் காணாமல் போய்விட்டது  என பேசினார்.

                இவ்விழாவிலிருந்து திடீரென செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையை பகைச்சுவையாய் பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்  என கூறினார்.

 

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.