• வேலூரில் உலக வெறி நோய் தடுப்பு தினம்.

 ·         வேலூரில் உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு இலவச தடுப்பூசி.

      வேலூர் மாவட்டம், தொரப்பாடியில் உள்ள கால்நடை பரமாரிப்பு துறையின் சார்பில் அங்குள்ள கால்நடை பன்முக மருத்துவ மனையில் உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி முகாமில் ஊசிகள் போடப்பட்டது.

                 இதில் வேலூர், சத்துவாச்சாரி, சேண்பாக்கம், கொணவட்டம், காட்பாடி ஆகிய அனைத்து பகுதிகளிலிருந்து வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு இலவசமாக வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. இம்முகாமினை கால்நடை மண்டல இணை இயக்குநர் கோபிகிருஷ்ணா துவங்கி வைத்தார். இதில் பன்முக மருத்துவமனையின் பிரதம மருத்துவர் பாண்டியன் உதவி இயக்குநர் அந்துவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் செல்ல பிராணிகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

 

Comments

Popular posts from this blog

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.