• அணைக்கட்டு வளர்ச்சி, திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
· அணைக்கட்டு வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி அணைக்கட்டு வட்டத்தில் சேக்கனூர், ஊசூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் வேலூர் ஒன்றியம், சேக்கனூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் (MGNREGS) ரூ.14.18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் நீர் ஊற்று புதிய குளம் வெட்டுதல் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அணைக்கட்டு வட்டம், ஊசூர் ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின்கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் கூரை ஓடு பதிக்கும் மற்றும் புதுப்பித்தல் பணிகளை பயனாளியின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவாக முடிக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் ஊசூர் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பயனாளிகளின் இல்லத்தின் தரைதளம் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் எவ்வளவு சிமெண்ட் வந்தத்து என்று கேட்டதற்கு பயனாளிகள் 50 மூட்டை சிமெண்ட் வந்தது என தெரிவித்தனர்.
தொடர்ந்து ஊசூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் II-ன் கீழ் ரூ.30.01 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, சம்பந்தபட்ட துறைக்கு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் பூதூர் ஏரியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் இலவச வண்டல் மண் எடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்செண்ட், கௌரி, அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா, உதவி செயற்பொறியாளர் (DRDA) வெற்றிச்செல்வன், பணி மேற்பார்வையாளர்கள் கார்த்திகேயன், வெண்ணிலா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Comments
Post a Comment