• ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி.

·         விபத்து இல்லா தீபாவளி எப்படி கொண்டாடுவது

   ஆற்காடு தீயணைப்பு துறை சார்பில் மகாலட்சுமி குளோபல் பள்ளியில் விபத்தில்லாத தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

                ஆற்காடு மகாலட்சுமி குளோபல் பள்ளியில் ஆற்காடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இணைந்து விபத்து இல்லா தீபாவளி பண்டிகை பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

           இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் Rtn.PHF.பாலாஜி லோகநாதன் சிறப்பு விருந்தினர்களை கௌரவித்து அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

            இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆற்காடு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பரிமளா கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்றும் பட்டாசு வெடிக்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் தெளிவாக மாணவர்களுக்கு தீயனைப்பு துறை உதவியாளர்கள் மூலம் விளக்கினார்.

     இந்நிகழ்ச்சியில் ஆற்காடு தீயணைப்பு துறை அதிகாரிகள், பள்ளி முதல்வர் தண்டபானி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை செயலாளர் சாந்திபாலாஜி, தாளாளர் கோமதிபாலாஜி, இணைசெயலாளர் செல்வி பா.வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

• பெ.தெ.லீ. பாலிடெக்னிக் கல்லூரியில் “மெக்கத்லான் 2024.