• வேலூரில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் பேட்டி

 ·         தமிழக சுகாதாரத்துறை சீர்கெட்டு உள்ளது - 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாநில பொதுசெயலாளர் வேலூரில் பேட்டி

     வேலூர் மாவட்டம், வேலூர் ஆசிரியர் இல்லத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு மாவட்ட தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பீமாராஜ், மகாதேவன், அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

                இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில பொது செயலாளர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     இந்த 108 ஆம்புலன்ஸ் இயக்கும் தனியார் நிறுவனம் ஆம்புலன்ஸ் பராமரிப்பு செய்யாமலும், தொழிலாளர்களுக்கு எதிராகவும் சட்ட விரோத நடவடிக்கையை செய்கின்றனர். இதனை செய்யும் .எம்.ஆர்.ஐ. ஜி.எச்.எஸ்  என்ற நிறுவனம் லாப நோக்கில் சேவையை செய்யாமல் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்வதை தடுக்க வேண்டும்.

     கிராமப்புறங்களில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் இயங்காததால் மக்களுக்கு உயிரிழ்ப்புகள் ஏற்படுகிறது. இதற்கு காரணம் தொழிலாளர்கள்தான் என பொய்யாக பழி சுமத்தபடுகிறது. அரசு ஆம்புலன்ஸ் தடையின்றி இயங்கவும், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவன சட்டவிரோத நடவடிக்கையை கைவிட செய்யவும், சுகாதார செயலாளர் திட்ட இயக்குநர் ஆகியோர்களிடம் புகாரை கொடுத்தால் நிர்வாகம் தொழிற்சங்கம் ஏற்றுகொள்ளாததால் ஒன்றும் செய்ய முடியாது என அரசு கைவிரிப்பதை கைவிட வேண்டும்.

     அரசு இதே நிலையில் இருந்தால் சுகாதார துறை மிகப்பெரிய சீர்கேட்டில் உள்ளது. அதனை பிரச்சாரம் செய்து மக்களை அணி திரட்டி பொது வேலை நிறுத்தத்தை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் செய்வோம். மேலும் எல்.பி.ஜி. தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களையும் அரசு முறையாக பராமரிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றுகிறோம்.

     வேலூர் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பாதிக்கப்பட்டனர். இது முழுக்க முழுக்க அரசின் பாராமுகம். தொழிலாளர்களுக்கு சம்பளம் இல்லை. மெக்கானிக் இல்லை. நுகர்வோர் உயிருடன் சிலிண்டர் நிறுவனங்கள் விளையாடுகிறது. ஐந்து பேர் உயிருக்கு போராடுகின்றனர். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடுவோம். ஏஜென்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நுகர்வோரையும் எல்.பி.ஜி தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அணி திரட்டி போராட்டம் நடத்துவோம்.

   திமுக கூட்டணியிலிருக்கும் எந்த கட்சியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்பதுதான் தமிழகத்தின் சாபக்கேடு. மேலும் அவர்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் சுகாதார சீர்கேட்டை தட்டி கேட்கவில்லை.

     அதிமுகவும் அறிக்கை அரசியலுடன் நிறுத்திவிட்டனர். ஒட்டுமொத்த தமிழக சுகாதார துறையின் முதுகெலும்பு தொழிலாளர்கள் அவர்களை கசக்கி பிழைய அரசே மாவட்ட சுகாதார சங்கம் என்ற பெயரில் ஒரு வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு எடுக்கின்றனர். ஆனால் சுகாதாரத் துறை அமைச்சர் 2553 சுகாதார பணியாளர்களை பணி அமர்த்துவதாக பேசுகிறார். ஆனால் லட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் தேவை. ஆனால் அதனை ஒப்பந்த முறையில் எடுப்பதை எதிர்க்கிறோம். ஒப்பந்த தொழிலாளர்கள் நடவடிக்கை சரியாக செயல்படுகின்றனர். ஆனால் ஊதியம், வார விடுமுறை போன்றவைகள் எங்களுக்கு அளிப்பதில்லை. குடிநீர் கூட 12 மணி நேரம் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தருவதில்லை. இதனால் சிறுநீரக கோளாறுகள், பெண் தொழிலாளர்கள் கர்ப்பப்பை கோளாறுகள் வருகிறது. இதனை சரி செய்ய வேலை பாதுகாப்பு வேண்டும். மக்கள் படிப்படியாக அரசு மருத்துவமனையை கைவிட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பும் அரசின் யுக்தியே இது என கூறினார்.

பேட்டி: ராஜேந்திரன் (108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுசெயலாளர்)

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.