• காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ குட்கா பறிமுதல்.
· போலீசார் விரட்டி பிடிக்க முயன்றபோது கவிழ்ந்த கார் - காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ குட்கா பறிமுதல்.
வேலூர் மாவட்டம், மேல்பாடி அருகே முத்தரசி குப்பத்தில் பெங்களூரில் இருந்து கார் சென்று கொண்டிருந்தது. முத்தரசிகுப்பம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் காரை நிறுத்த முயன்றபோது, கார் நிறுத்தாமல் வேகமாக சென்றது. உடனடியாக போலீசார் காரை பிடிக்க போலீஸ் வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
போலீசாருக்கு போக்கு காட்டி வேகமாக சென்ற கார் நிலைதடுமாறி சாலை அருகே இருந்த வயல் வெளியில் கவிழ்ந்தது. அதில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் காரில் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்பராக் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. மேல்பாடி காவல் நிலையத்திற்கு காரை எடுத்துச் சென்ற போலீசார் அதிலிருந்த 450 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடத்தி வந்தவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கார்களுடன் வந்த 2 கார்கள் தப்பி சென்றுள்ளது. அதிலும் குட்கா கடத்தி வரப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கார்களையும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் குஜராத் பதிவெண் கொண்டது.
Comments
Post a Comment