• வேலூர் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனம் நிறுத்துவது தொடர்பாக
· வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலையில் Smart City திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்வது மற்றும் சாலை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக வாகனம் நிறுத்துவது தொடர்பாக
வேலூர் மாநகராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் மற்றும் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் விளம்பர பலகை வைக்கவும் போக்குவரத்திற்கு இடையூறாக தங்களுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி மழைநீர் கால்வாய் மற்றும் சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள் மற்றும் விளம்பர பலகைகளை அகற்றவும் தங்களுடைய கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கி வசதி செய்திட இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறும் பட்சத்தில் மேற்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment