• வேலூரில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
வேலூர் மாவட்டம், வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் இரண்டாவது நாளாக பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாண்டுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் பெயர் மாற்ற விதி திருத்த ஆணையை உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்ச வரம்பை 5 சதவிகிதமாக குறைத்துள்ளதை மீண்டும் 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனே வழங்க வேண்டும். மேலும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவிக்கிறது. அதற்கு தேவையான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
பேட்டி: ரமேஷ் (தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர்)
Comments
Post a Comment