• வேலூர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம்.

·        வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில்  நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மண்பாண்ட தொழிலாளர்களுக்கான குறைதீர்வு கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசின் அடையாள அட்டைகளை 50 தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது

மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பிரதம மந்திரியின் அனைவருக்கும் வேலைவாய்ப்பு திட்டத்தில் (PMEGP) கடனுதவி கோரும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகுந்த உதவிகள் வழங்கப்படும்.

மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையின்படி மாவட்ட திறன் பயிற்சி மையத்தின் மூலம் மண்பாண்ட தொழில்புரிய ஆர்வமுள்ள நபர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்க  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மண்பாண்டங்கள் செய்யும்போது களிமண்ணுடன் சவூடு மண்ணும் தேவைப்படுகிறது என தொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுடைய விவரங்களை வழங்கினால் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து சவூடு மண் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  

மழைக்காலங்களில் தொழில்புரிய முடியாத சூழ்நிலையில் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொழில் நலத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு  இலவச வண்டல் மண் வழங்கும் திட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களிடம் நலவாரிய உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால் அவர்களுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு வட்டாட்சியர்கள் அனுமதி வழங்க வேண்டும்.

மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுடைய மண்பாண்ட உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக சந்தை வேண்டுமென தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேளாண்மை துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்களுடன் ஆலோசித்து வேலூர், அணைக்கட்டு, கீ.வ.குப்பம், பள்ளிகொண்டா மற்றும் குடியாத்தம் ஆகிய பகுதிகளில் சந்தைகளில் இடம் ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பத்திலுள்ள விருப்பமுள்ள பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைந்து சுழல் நிதி பெற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி,தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமணி,  ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மண்டல உதவி இயக்குநர் அப்லாஅசன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.