• விழுப்புரம், முட்டத்தூர் CSI ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி ஐம்பெரும் விழா.

·         விழுப்புரம், முட்டத்தூர் CSI ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளி ஐம்பெரும் விழா.

·         ஒய்க்காஃப் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள், பொது மக்களுக்கு அன்பின் அழைப்பு. 

      ·         பேராயர்  மற்றும் தலைவர்கள் பங்கேற்பு.

சிதலை தினப்பட்ட ஆலமரத்தை

மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக்

குதலைமை தந்தைகண் தோன்றில்தான் பெற்ற

புதல்வன் மறைப்பக் கெடும்.

-நாலடியார் 197

பொருள்:

கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தினை அதன் விழுது தூணாக நின்று தாங்குவது போல, தந்தையிடம் முதுமையினால் தளர்ச்சி உண்டாகும்போது, அவன் பெற்றமகன் முன் வந்து பாதுகாக்க, தந்தையின் தளர்ச்சி நீங்கும்.

ஒரு பள்ளிக்கும் அதன் முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள உறவு என்பது alma mater relationship என்று குறிக்கப்படும். அதாவது தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு போன்றது.

மேலே குறிப்பிட்டுள்ள நாலடியார் செய்யுளைப் போல நம் பள்ளிக்கும் தேவை ஏற்படும்போது அதன் முன்னாள் மாணவர்கள் ஆல மர விழுது போல தோள் கொடுத்து தாங்க வேண்டும்.

தங்களின் உயர்வுக்கு அடித்தளம் அமைத்துத் தந்த நம் பள்ளி தங்களை நெடுங்காலத்திற்குப் பிறகு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, சந்திக்க ஆவலாய் காத்து நிற்கிறது.

எனவே நிகழும் 2024 டிசம்பர்த் திங்கள் 3-ஆம் தேதி (03.12.2024)  முற்பகல் 11 மணிக்கு தாங்கள் படித்தப் பள்ளிக்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறோம். ஆலமரமாய்த் திகழும் நம் பள்ளியின் விழுதுகளாகிய தங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

இப்படிக்கு தங்கள் அன்புள்ள,

தாளாளர்,

தலைமை ஆசிரியர் ( பொ),

உதவித் தலைமை ஆசிரியர்,

இருபால் ஆசிரியர்கள்,

மாணவ மாணவியர்

மற்றும்

ஒய்க்காஃப் மேல்நிலைப்பள்ளி, ஜோதி நிலையம், முட்டத்தூர்.

தொடர்புக்கு:

1. திரு.பி. டேவிட் சுரேஷ் பாபு,தலைமை ஆசிரியர் (பொ)  7708354864

2.  திரு.ஜேக்கப் ஜீவானந்தம், உதவித் தலைமை ஆசிரியர், 88248340117

3. திருமதி.‌.ஜெயசெல்வி, முதுகலைத் தமிழாசிரியை 9486986585

4. திரு.டேவிட் சார்லஸ், முதுகலை வணிகவியல் ஆசிரியர் - 9943832094

5. திரு.R. இர்வின்பால், பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) - 9842459675

6. திரு.V.F வினோத் குமார், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) -7639133770

7. திரு. A. ஜோசப், பட்டதாரி ஆசிரியர் (வரலாறு) -9443143107

8.  திரு.R.K. செல்வக்குமார், உடற்கல்வி ஆசிரியர் -9751530077

ஒய்க்காஃப் மேல்நிலைப்பள்ளி, முட்டத்தூர் 605 203.

E-mail:  vpm3540100@yahoo.in

குறிப்பு:

தங்களின் வருகையை மேற்கண்ட ஏதேனும் ஒரு தொலைபேசி எண்ணில் உறுதி செய்து கொள்ளவும்.

 



Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.