• வேலூரில் கிரில் அமைக்கும் பணியின்போது இறந்த தொழிலாளிக்கு இழப்பீடு.
· வேலூரில் கிரில் அமைக்கும் பணியின்போது இறந்த வெல்டிங் தொழிலாளிக்கு தமிழ்நாடு வெல்டிங்க் உரிமையாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டது
வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையில் பத்மா ஸ்டீல் ஒர்க்ஸ் உரிமையாளர் முகேஷ் மற்றும் தொழிலாளி சதிஷ்குமார் ஆகியோர் மேல்வல்லம் கிராமத்தில் ஒரு வீட்டில் ஸ்டீல் கிரில் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை அறிந்த வெல்டிங் உரிமையாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமையில் இழப்பீட்டு தொகையாக ரூ.50 ஆயிரத்தை மின்சாரம் தாக்கி பலியான தொழிலாளி சதிஷ்குமார் குடும்பத்தினரிடம் அளித்து ஆறுதல் கூறினார்கள்.
மேலும் மத்திய மாநில அரசுகள் வெல்டிங் மற்றும் கிரில் ஒர்க்குகளுக்கு பல்வேறு வரிகளை வசூலிக்கிறது. ஆனால் எங்களுக்கு போதிய பணி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து பல மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி வெல்டிங் தொழிலாளர்கள் பலர் இறக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நிற்கதியாகி நிற்கிறது. எனவே இழப்பீட்டை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். பணிபாதுகாப்பை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
Comments
Post a Comment