• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.
· வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் 371 கோரிக்கை மனுக்களை பெற்றார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. மருத்துவத் துறை, கிராம பொதுப் பிரச்சனைகள், குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 371 மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம் மற்றும் இயற்கை மரண நிவாரண உதவி தொகை ஆகிய உதவித்தொகைக்கு 13 பயனாளியின் குடும்பதாரிடம் ரூபாய் 2,52,500/- க்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இலவச தையல் இயந்திரம் வேண்டி கோரிக்கை மனு அளித்தவருக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டத்திகீழ் ரூ.6,000/- மதிப்பிலான தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ந.இராமசந்திரன், உதவி ஆணையர் (கலால்) முருகன், மாவட்ட பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் சீதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment