• வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்.
- வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத்தொகையை பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாபுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக 4,26,993 நபர்களும் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் 3,00,569 நபர்களும், ஆக மொத்தம் 7,27,561 நபர்கள் உள்ளனர்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய கீழ்கண்ட வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு,
1. 2.50 ஏக்கருக்கு மேற்படாத நஞ்செய் நிலத்தை அல்லது 5.00 ஏக்கருக்கு மேற்படாத புஞ்செய் நிலத்தினை சொந்தமாக வைத்திருந்து மற்றும் அந்நிலத்தில் நேரடியாக பயிர்செய்யும் 18 முதல் 65 வயது வரை அனைத்து குறு மற்றும் சிறு விவசாயிகள்,
2. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற்காகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள்
3. மேற்கண்ட இரண்டு வகைகளை சேர்ந்தவர்கள் மூல உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர்கள். மேலும் அவர்களை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களும் இத்திட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்ய தகுதியானவர்கள்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகள் பின்வருமாறு.
அ. கல்விக்கான உதவி:
1. ITI, polytechnic பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.1250-ம் பெண் மாணவர்களுக்கு ரூ. 1750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
2. ஆசிரியர் பயிற்சி (ம) செவிலியர் பட்டப்படிப்பு பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.1250-ம் பெண் மாணவிகளுக்கு ரூ. 1750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
3. இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.1750-ம் பெண் மாணவிகளுக்கு ரூ. 2250-ம் வழங்கப்பட்டு வருகிறது.
4. முதுகலை பட்டப்படிப்பு பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.2250-ம் பெண் மாணவிகளுக்கு ரூ. 2750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
5. சட்டம், பொறியியல், மருத்துவம், கால்நடை அறிவியல் வேளாண்மை அல்லது அது தொடர்பான பாடங்களில் தொழிற்கல்வி பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.2250-ம் பெண் மாணவிகளுக்கு ரூ. 2750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
6. முதுநிலை தொழிற்கல்வி பயிலும் ஆண்டிற்கு ஆண் மாணவர்களுக்கு ரூ.4250-ம் பெண் மாணவிகளுக்கு ரூ. 4750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆ. திருமண உதவி:
ஆண்: ரூ.8000/-
பெண்: ரூ.10,000/-
இ. விபத்து நிவாரனம்: ரூ.1,00,000/- (இறப்பு)
ஈ. இயற்கை மரண உதவித்தொகை (ம) ஈமச்சடங்கு
(உறுப்பினர்களுக்கு மட்டும்) : ரூ.20,000/-
மேற்கண்ட திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment