• மறைந்த முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன்சிங்-குக்கு அஞ்சலி.
·
மறைந்த முன்னாள் பாரத
பிரதமர் மன்மோகன்சிங்-குக்கு காங்கிரஸ்
திமுக,
மதிமுக
உள்ளிட்ட
கூட்டணி
கட்சியினர்
அஞ்சலி
- மௌன
ஊர்வலம்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த பாரத முன்னாள் பிரதமர் மன்மோகன் திருஉருவ படத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மேயர் சுஜாதா, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் வாஹீத் பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் திருஉருவ படத்தினை வேனில் வைத்து கொண்டு மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. இதில் திமுக, மதிமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர். இறுதியாக மீண்டும் காங்கிரஸ் அலுவலகத்தில் இந்த மௌன அஞ்சலி ஊர்வலம் நிறைவடைந்தது.
Comments
Post a Comment