• இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்களின் தகவல் சேகரித்தல்.

       இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளை உறுப்பினர்களின் தகவல் சேகரித்தல்.

                இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் அனைத்து உறுப்பினர்களின் தகவல்கள் சேகரிக்கும் பொருட்டு மொத்தம் உள்ள 619 உறுப்பினர்களின் பெயர், விலாசம், உறுப்பினர் எண் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் உறுப்பினராக சேர்ந்த தேதி ஆகியவற்றை MS-Excel படிவத்தில் சமர்ப்பிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சேர்மென் தலைமையில் 30.09.2024 அன்று காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட கிளையிலிருந்து உறுப்பினர்களின் விபரம் பெயர், விலாசம், ஆதார் எண், கைப்பேசி எண், உறுப்பினர் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவை வரப்பெறவில்லை என்று தெரிவித்தனர். மேற்படி பொருள் குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அனுப்பி நாளொன்றுக்கு தலா 50 உறுப்பினர்கள் வீதம் 27.12.2024 முதல் 22.01.2025 வரை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் உறுப்பினர்களின் விவரங்களை நேரில் சமர்பிக்க தபால் அனுப்பி கோரப்பட்டது. இவற்றில் 80 உறுப்பினர்கள் மட்டும் நேரில் வருகை புரிந்து தங்களது விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.

மேற்படி விவரங்களை சமர்ப்பிக்காத உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் தங்கள் விவரங்களை 20.02.2025க்குள் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறினால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேற்படி விவரங்கள் மாநில கிளைக்கு அனுப்பி வைக்க வேண்டியிருப்பதால் உடனடியாக நேரில் ஆஜராகி தங்கள் விவரங்களை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.