• வேலூர் மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பொறுப்புகள் ஆலோசனை கூட்டம்.
· வேலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆலோசனை கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியின் நோக்கம்
சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அவர்கள் பகுதிக்குட்பட்ட கிராமங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்திட உரிய திட்டங்களை வகுத்து அறிவுரைகள் வழங்குதல்.
இப்பயிற்சி முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார அலுவலக கூட்ட அரங்குகளில் ஒரு நாள் பயிற்சியாக நடைபெறும். இப்பயிற்சியில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்த சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பயிற்சிக்கு 100 உறுப்பினர்கள். பயிற்சி பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள் மூலம் (2 நபர்கள்) பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சி 04.02.2025 அன்று அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 06.02.2025 அன்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 13.02.2025 அன்று கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 18.02.2025 அன்று காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 20.02.2025 அன்று கீ.வ.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 25.02.2025 அன்று பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 27.02.2025 அன்று வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 4.00 மணி வரையும் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது.
பயிற்சியின் போது நுகர்வோர் நலன் சார்ந்த துறைகளான கூட்டுறவு துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபத்துறை, உணவு பொருள் பாதுகாப்பு துறை, பொது சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுபாட்டு துறை, சட்ட முறை எடையளவுகள் துறை ஆகிய துறைகள் மூலம் பொதுவாக அன்றாட வாழ்வில் நுகர்வோர் சந்திக்கும் சில இன்னல்களான உணவு கலப்படம் மற்றும் பாதிப்புகள் கலப்படத்தை வீட்டிலிருந்து கண்டறியும் தேர்வுதுறை, பொது விநியோகத் திட்டத்தின் நோக்கம் மற்றும் தர நிர்ணயம் செய்யப்பட்ட பொருள்கள் உபயோகப்படுத்துதல் குறித்து விவரங்களை காட்சிப்படுத்தி (PPT) விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களை கொண்டு தன்னார்வ நுகர்வோர் குழுக்களை உண்டாக்குதல் குறித்து அறிவுரை வழங்கப்பட வேண்டும். பயிற்சி பெறும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பொருட்கள் கையேடு/உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு ஒரு நாள் உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சி அளிக்கும் தன்னார்வ நுகர்வோர் உறுப்பினர்கள் (2 நபர்களுக்கு) ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, மகளிர் திட்ட இயக்குநர் உ.நாகராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment