• சேக்கனூர் ஊராட்சி டி.கே.எம் கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி.


 ·         சேக்கனூர் ஊராட்சியில் டி.கே.எம் கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி திட்டம்.

   ·         இயற்கையை போற்றுவோம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைதலைவர் கே.விஸ்வநாதன் கருத்துரை.

     வேலூர் மாவட்டம், டி.கே.எம் (DKM) கல்லூரி நிர்வாகம் சார்பாக கல்லூரி மாணவிகளின் தேசிய நாட்டு நல பணி திட்டம் சார்பாக வேலூர் ஒன்றியத்தில் உள்ள சேக்கனூர் ஊராட்சியில் NSS முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர்கள், NSS முகாமை சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பல்வேறு கருத்தாளர்கள் வருகை தந்து மாணவிகளுக்கு பல்வேறு விதங்களில் கருத்துரைகள் ஆற்றினர்.

     இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட துணைதலைவர் மற்றும் காட்டுப்புத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.விஸ்வநாதன் இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் இந்தியாவின் இயற்கை வளங்கள் எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் இயற்கை வளங்களின் பட்டியலை தொகுத்து வழங்கியும், அடுத்த தலைமுறைக்கு இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய நடைமுறைகளையும், தாங்கள் தலைமை பொறுப்பு கிராமத்தில் அல்லது குடும்பத்தில் பொறுப்பேற்றுக் கொள்ளும் பொழுது இயற்கை வளங்களை பாதுகாப்பது கடமைகளை பற்றியும் படங்களை காட்டியும் செய்முறை பயிற்சியின் மூலமும் வார்த்தைகளில் தாக்கத்தின் மூலமும் விளக்கம் அளிக்கப்பட்டது.

     மாணவிகள் மிக உற்சாகத்தோடு பங்கேற்றார்கள். பயனுள்ளதாகவும் அமைந்தது என்று கருத்துரையில் கூறினார்கள் பேராசிரியர்களும் சிறப்பாக வகுப்பு இருந்ததாக கருத்துரை கூறினார்கள். சரியாக பிற்பகல் நாலு மணிக்கு கருத்துரை முடிக்கப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• வேலூர் ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டமைப்பு "ஐம்பெரும் விழா”.

P.T.LEE கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா.