• ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷம்.
· ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷம் – நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம்.
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வில்வ இலைகள், அருகம்புல், மலர் மாலைகள் ஆகியவைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகா தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க சாமி உட்பிரகார உலாவும் வந்தது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment