• அரசு மதுபானகடை பணியாளர் ஆயத்த மாநாடு.


 ·         அரசு மதுபானகடை பணியாளர் காலவரையற்ற காத்திருப்பு போராட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மூன்று மாவட்ட ஆயத்த மாநாடு.

    ·         டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பெரியசாமி வேலூரில் பேட்டி

      வேலூர் மாவட்டம், வேலூர் ஆசிரியர் இல்லத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் .ஐடியுசி, தொழிற்சங்கத்தின் சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மூன்று மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆயத்த மாநாடு கூட்டம் ஒருங்கிணைந்த தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

     இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா, டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட பொருளாளர் ரமேஷ், மாநில பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

              பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாநில தலைவருமான பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

     டாஸ்மாக் பணியாளர்கள் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். பணி ஓய்வு 60 வயதாகவும் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தலைமை செயலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

     ஆனாலும் மதுக்கடைகளை மூடமாட்டோம். அவைகள் வழக்கம்போல செயல்படும். தேர்தல் காலத்தில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக இந்த அரசு வாக்குறுதி அளித்தது. 4 ஆண்டு காலம் நாங்கள் காத்திருந்தோம். தமிழக அரசுக்கு அதிக அளவு வருவாயை நாங்கள் இந்த துறையின் மூலம் ஈட்டி தருகிறோம். எவ்வளவோ இடையூறுகளை சந்திக்கிறோம். பணி பாதுகாப்பில்லை. உயிருக்கு உத்தரவாதமில்லை. ஆனால் தமிழக அரசு எங்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. இதனால்தான் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கைது செய்தாலும் காவல் நிலையத்தை விட்டு போகமாட்டோம். காவல் நிலையத்திலேயே காத்திருப்பு போராட்டத்தை தொடருவோம். நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பொது இடங்களில் அரசியல் கட்சி கொடிகளோ, தொழிற்சங்க கொடிகள் இருக்க கூடாது. அவைகளை அப்புறப்படுத்த வேண்டுமென தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. எனவே தமிழக அரசு உடனடியாக இந்த தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டுமென கேட்டு கொள்கிறோம் என்று கூறினார்.

பேட்டி: பெரியசாமி (மாநில தலைவர் டாஸ்மாக் பணியாளர் சங்கன்- ..டியுசி).

 

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.