• வேலூர் அரசு பொருட்காட்சி 28.02.2025 அன்று நிறைவு.

  • வேலூர்  மாங்காய் மண்டி அருகே நடைபெற்று வரும்  அரசு பொருட்காட்சி 28.02.2025 அன்று நிறைவு பெற உள்ளது - பொதுமக்கள் அதிகளவில் வந்து அரசு பொருட்காட்சியினை கண்டுகளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
  • மேலும்  இதுநாள் வரை 22,062-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசு பொருட்காட்சியினை வேலூர் மாங்கா மண்டி அருகில் உள்ள ஸ்ரீகிருபா வர்த்தக மைதானத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 12.01.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

இப்பொருட்காட்சி 12.01.2025 முதல் 28.02.2025 வரை நடைபெறும் இப்பொருட்காட்சியில் நீர்வளத் துறை, சுற்றுலாத் துறை, வேளாண்மைத் துறை, வேலூர் மாநகராட்சி, காவல் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, மகளிர் திட்டம், நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மாசுக்கட்டுபாட்டு வாரியம், கூட்டுறவுத் துறை, செய்தி மக்கள் தொடர்புத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பள்ளிக்கல்வித் துறை, வனத்துறை, மீன்வளத் துறை, பொதுப்பணித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை,  போக்குவரத் துறை, சுகாதாரத் துறை, தோட்டக்கலைத் துறை, தொழிலாளர் நலத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, ஆவின், விளையாட்டுத் துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, மாவட்ட தொழில் மையம், நகராட்சி நிர்வாகம், சமூக நலத் துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளின் சார்பில் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ள விவரங்கள் குறித்தும் கண்காட்சி அரங்குகள் அமைத்து பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                மேலும் இப்பொருட்காட்சியில் துறை சார்ந்த அரங்குகளில் அரசின் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த திட்டங்களின் மூலம் பயன்களை பெறுவதற்கான விவரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பொருட்காட்சியில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக பொதுமக்களுக்கான அங்காடிகள், உணவகங்கள் மற்றும் விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பொருட்காட்சியினை இதுநாள் வரை  22,062 நபர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் அரசு பொருட்காட்சி 28.02.2025 அன்று  நிறைவு பெற உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகளவில் வந்து அரசு பொருட்காட்சியினை கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.