• வேலூர் ஆக்சிலியம் கல்லூரி 70வது கல்லூரி ஆண்டு விழா.
· வேலூர் ஆக்சிலியம் கல்லூரி - 70வது கல்லூரி ஆண்டு விழா.
· சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள், பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி பாராட்டு.
பாரம்பரியமிக்க பவள விழா காணும் ஆக்சிலியம் கல்லூரியின் 70-வது ஆண்டு விழா தொடங்கியது. இதற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் குளோரிஸ்வரூபா தலைமை இயக்குநர், தேசிய நுண் சிறு மற்றும் நடுத்தர நிறுவனம் (NI-MSME) ஹைதராபாத், இந்திய அரசின் MSME அமைச்சகம், இந்தியா, கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கல்லூரி செயலர் முனைவர் அருட்சகோதரி மேரிஜோஸ்பின்ராணி கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.
மாணவிகள் கல்வியில் சிறந்து பல புதுமையான திட்டங்களை வகுத்துச் சாதனைப் பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு முன்னிலை வகுத்த கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஆரோக்கியஜெயசீலி 2024-2025-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வழங்கினார். கல்லூரிச் செயலர் முனைவர் மேரிஜோஸ்பின்ராணி ஓய்வு பெறும் இணைபேராசிரியர், ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் வெர்ணம்செசிலியா-க்கும் இணைப்பேராசிரியர் தாவரவியல் துறை தலைவர் முனைவர் இஸபெல்லாரோஸ்லின் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முனைவர் அக்சிலியா அந்தோணி அவர்களுக்கும், ஆகியோரின் அர்ப்பணிப்புப் பணியைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் வெள்ளி விழாக் காணும் இணைப்பேராசிரியர் கணிதவியல் துறைத்தலைவர் முனைவர் கஸ்தூரி, இணைபேராசிரியர் வேதியியல் துறை தலைவர் முனைவர் ரோஸிலின்எழிலரசி, இணைப்பேராசிரியர் விலங்கியல் துறை தலைவர் முனைவர் ஆரோக்கியகுமாரி, இணைபேராசிரியர் விலங்கியல் துறை தலைவர் முனைவர் மேரிஆக்னஸ் மற்றும் பணியாளர் ஜேக்கப்ஆண்டனி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஜெயசீலி, தேர்வாணையர் இயற்பியல் துறைதலைவர் முனைவர் வின்சி மற்றும் துணைமுதல்வர் முனைவர் அமலா வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புரையினை முதுகலை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பியூலாசுரேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியரல்லாப் பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன. மேலும் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை புவனேஷ்வரி இந்திய இடையேயான பளு தூக்கும் போட்டியில் 7-ஆம் இடத்தைப் பெற்றுள்ளதால் கோவாவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா பளுதூக்கும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை இக் கல்லூரி நிர்வாகம் மனமகிழ்வுடன் பாராட்டுகிறது. கலை நிகழ்ச்சிகளுடன் விழா அழகாக நடந்தேறியது. வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கங்கா நன்றியுரை வழங்கினார்.
Comments
Post a Comment