• காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

·         காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

   ·         தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சி – ஒளி பிரதிபலிப்பு, ஒளி விலகல், ஒளி சிதறல் பற்றிய செய்முறை பயிற்சி - வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன்.

     வேலூர்  மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், காட்டுப்புத்தூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு  தேசிய அறிவியல் நாள் ஓட்டி பள்ளியில் , பெற்றோர்களுக்கும் , தேசிய அறிவியல் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. 

                இதில் ஒளி பற்றிய மூன்று விஷயங்கள் முதலில் ஒளிபிரதிபலிப்பு, ஒளி விலகல், ஒளி சிதறல் பற்றிய செய்முறை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. பிறகு சர்.சி.வி.ராமன் வரலாறு மற்றும் ஆசியா கண்டத்திலேயே முதல் நோபல் பரிசு பெற்ற சிறப்பு தன்மையையும், விஞ்ஞானி ராமன் கண்டுபிடிப்பான ஒளி சிதறல் பற்றிய விளக்கம் செய்முறை பயிற்சியின் மூலம் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

                மேலும் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் மாணவர்களுக்கு மற்றும் இளைய தலைமுறைகளுக்கு சொல்லப்பட்ட அறைகூவல் மாணவர்களுக்கு கூறப்பட்டது. மேலும் பெற்றோர்கள் அறிவியல் சிந்தனையை மாணவர்களிடத்தில் வளர்க்க அறிவியல் செயல்பாட்டு முறைகளை எப்படி வீட்டில் மாணவர்கள் இடத்தில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விளக்கத்தை பள்ளியின் கல்வியாளரும் முன்னாள் மாணவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  மற்றும் வானவில் மன்ற இணை ஒருங்கிணைப்பாளர் கே.விஸ்வநாதன் பயிற்சி கொடுத்தார்.

                பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி மற்றும் உதவி ஆசிரியர்கள் எஸ்.எம்.சி தலைவர் துணைதலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு  கூட்டத்தை சிறப்பு செய்தனர்.

                பிறகு எஸ்.எம்.சி. கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மாணவர்கள் வெகு உற்சாகமாக   ஆர்வத்துடன்  பஙகேற்றனர். பிறகு நன்றி கூறப்பட்டது.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.