• இலவம்பாடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா.
· இலவம்பாடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா.
· கவிஞர் லக்குமிபதி பக்தி சொற்பொழிவு.
வேலூர் அடுத்த இலவம்பாடியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மா.காமராஜ் தலைமை தாங்கினார். மேட்டுக்குடி தியாகராஜன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் தஞ்சான் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வாரியார்தாசன் என்ற கவிஞர் ச.லக்குமிபதி, 'அடைந்தவருக்கு அருளும் அப்பா போற்றி' என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவாற்றினார்.
விழாவில் செங்குட்டுவன், கோபி, சுதாகர், குப்புசாமி, கோயில் அர்ச்சகர் சம்பத் உள்பட திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தார்வழி விஜயகுமார் நன்றி கூறினார்.
Comments
Post a Comment