• வேலூரில் விதைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் கண்காட்சி திருவிழா
· வேலூரில் விதைகள், காய்கறிகள் மற்றும் கிழங்குகள் கண்காட்சி திருவிழா - ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
வேலூர் மாவட்டம், வேலூர், வெங்கடேஸ்வரா பள்ளியில் மரபு காய்கறிகள் மற்றும் விதைகள் சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்காட்சி மற்றும் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சுமார் தமிழகம் முழுவதுமிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இயற்கை விவசாயத்தை அதிகரிக்கவும், இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம், விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இக்கண்காட்சி நடைபெற்றது.
இதில் பாரம்பரிய அரிசிகள், நெல் ரகங்கள், பல்வேறு வகையான கிழங்குகள், நூற்றுக்கணக்கான தக்காளி, பூசனிக்காய், கத்தரிக்காய், மிளகாய், வெண்டை, சுரக்காய், பீர்கங்காய் ஆகியவைகள் மற்றும் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, குடவாழை, ரத்தசாளி, கொத்தமல்லி, தூயமல்லி, சிவனார் சம்பா மாப்பிள்ளை சம்பா, சிவப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய அரிசிகள், முடவாட்டுக்கால் கிழங்கு, மரவள்ளி கிழங்கு ரகங்களும், வாழைகள், கேழ்வரகு, தினை சாமை, நவதானியங்கள், கொள்ளு, பச்சை பயறு, காராமணி, மொச்சை, இஞ்சி ரகங்கள், மஞ்சள் ரகங்கள் ஆகியவைகளும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டு வாங்கி சென்றனர்.
Comments
Post a Comment