• பேர்ணாம்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்.
· வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் 26.02.2025 அன்று பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர்.
வேலூர்
மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி கொண்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களும் சென்றடைய 19 அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்த முகாம்கள் ஒற்றை சாளர முறையில் (Single Window
Approach) வட்டார வாரியாக மாற்றுத் திறனாளிகளுக்கான
சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இம்முகாம்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (UDID), பராமரிப்பு உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய் துறை மூலமாக வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, ஊரக வளர்ச்சித் துறை மூலமாக வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் முழு ஊதியத்துடன் கூடிய நூறு நாள் வேலை அட்டை பதிவு, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் விலையில்லா வீடு வழங்கும் திட்டம், மருத்துவத் துறையின் மூலம் இலவச பஸ் பாஸ் மற்றும் இரயில்வே பாஸ் பதிவு செய்தல், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் பாரத பிரமரின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) மற்றும் மத்திய அரசின் வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்திட்டம் (UYEGP) போன்ற திட்டங்களின்கீழ் கடன் வழங்குதல், தாட்கோ மூலமாக வங்கி கடன், கூட்டுறவு வங்கியின் மூலமாக வங்கி கடன் பெறுதல் (NHFDC), முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளுதல் ஆகிய பல்துறை அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, அணைக்கட்டு, அணைக்கட்டு வட்டாரம்-அகரம், வேலூர், குடியாத்தம், கணியம்பாடி, கீ.வ.குப்பம் ஆகிய வட்டாரங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பேர்ணாம்பட்டு வட்டாரத்தில் 26.02.2025 அன்று பேர்ணாம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாமில் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மனுக்கள் வழங்கி அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment