• வேலூர் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல்.
· வேலூர் திமுக மத்திய மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல்
· பொதுமக்களுக்கு பழங்கள், மோர் உள்ளிட்டவைகளை சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வழங்கினார்.
வேலூர் மாவட்டம், வேலூரில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் மத்திய மாவட்ட அலுவலகத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் தலைமையில், அவரது சொந்த செலவில், கோடை வெய்யிலில் செல்லும் பொதுமக்களுக்கு நீர், மோர், மற்றும் தர்பூசணி, பப்பாளி, முலாம்பழம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
இந்த நீர் மோர் பந்தலை வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் பொதுமக்களுக்கு வழங்கி துவங்கி வைத்தார். மக்களும் பழங்கள், மோர் ஆகியவைகளை வாங்கி சென்றனர். இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட திரளான திமுக-வினரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment