• காட்பாடி திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
· காட்பாடி, பிரம்மபுரத்தில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு
வேலூர் மாவட்டம், காட்பாடி, பிரம்மபுரத்தில் காட்பாடி ஒன்றிய திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சார்பில் ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் மத்திய அரசு நூறு நாள் வேலைக்கான நிதி ரூ.4,034 கோடியை உடனடியாக வழங்க கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் உறுதி ஏற்க அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக உறுதி ஏற்றனர். பின்னர் மத்திய அரசு உடனடியாக ரூ.4,034 கோடி பணத்தை நூறு நாள் வேலைக்கு வழங்க கோரி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
பிஜேபி மோடி என சொல்லி கொண்டு மக்களிடம் நாட்டில் எவனும் ஓட்டு கேட்க முடியாது. காரணம் எந்த துரோகத்தை உங்களுக்கு செய்திருக்கிறார்கள். மத்திய அரசு மோடியும், நூறு நாள் வேலைக்கான பணத்தை கொடுக்காமல் உங்களை ஏமாற்ற முடியாத காந்தி பெயரில் உள்ளதாலேயே இந்த திட்டத்தை மூட பார்க்கிறார்கள் என பேசினார்.
Comments
Post a Comment