• காட்பாடியில் எம்.பி. கதிர்ஆனந்த் ரம்ஜான் பொருட்கள் வழங்கினார்.
· காட்பாடியில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாடும் வகையில் ரூ.43 லட்சம் ரம்ஜான் பொருட்களை வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் சொந்த செல்வில் தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி, சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்தின் சொந்த செலவில் ரூ.43 லட்சம் மதிப்பில் காட்பாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் கொண்டாட தொகுப்பு அரிசி, பூண்டு, வெங்காயம், பட்டை, லவங்கம், நெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இறைச்சி வாங்கி சமைத்து உண்ண ரூ.200 பணம் ஆகியவை வழங்கப்பட்டது. இதனை தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன் 5,073 இஸ்லாமிய மக்களுக்கு வழங்கினார். இவ்விழாவில் வன்னியராஜா உள்ளிட்டோரும், காட்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான இஸ்லாமிய மக்களும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment