• வேலூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைதலைவர் பேட்டி.
· தமிழகத்தில் மாணவர் எண்ணிக்கையை காரணம் காட்டி ஆரம்ப பள்ளிகளை மூட கூடாது.
· வேலூரில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைதலைவர் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூர் ஆசிரியர் இல்லத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பறிற்சி கருத்தரங்கம் மற்றும் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப்அன்னையா வரவேற்று பேசினார். வாரா ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய துணைதலைவர் ச.மயில், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பொ.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வாழ்வாதார கோரிக்கைகளான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஈட்டிய விடுப்பு சரண் செய்யப்படும் நடைமுறை பறிக்கப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர்களிடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். திமுக அரசால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கின்ற பத்து அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் குறிப்பாக பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பறிக்கும் அரசாணை எண் 243-ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்வி கொள்கை 2020-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியான ரூ.2,152 கோடியினை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும்,
பழைய ஓய்வூதிய திட்டத்தினை தேசம் முழுவதும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்திட கோரி அகில இந்திய செயற்குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும் தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி கிராமப் பகுதிகளில் உள்ள ஆரம்ப பள்ளிகளை தமிழக அரசு மூட கூடாது. கிராமப்புற மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். இதனால் தமிழகத்தில் கல்வியும் பாதிப்பு ஏற்படும். எனவே தமிழகத்தில் பள்ளிகளை மூடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என அகில இந்திய துணைத்தலைவர் மயில் செய்தியாளர்களிடம் கூறினார்
Comments
Post a Comment