• வேலூர் டாக்டர் இக்ரம் ஃபயர் மார்ஷல்

· வேலூர் டாக்டர் இக்ரம் தீயணைப்பு துறை ஃபயர் மார்ஷலாக (FIRE MARSHALL) கூடுதலாக 5 மாவட்டங்களுக்கு நியமனம். வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு . இக்ரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி இயக்க துறையில் வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை பாதுகாப்பு அதிகாரியாக (FIRE MARSHALL) கடந்த 15 ஆண்டுகள் சேவை மனப்பான்மையுடன்சிறப்பாக பணிபுரிந்து வருகின்றார் இந்நிலையில் அவரது பணியை பாராட்டி மேலும் கூடுதலாக 5 மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான பணி நியமன ஆணையை சென்னையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி தலைமை இயக்க அலுவலகத்தில் இயக்குனர் டிஜிபி ஆபாஷ்குமார் டாக்டர் அ.மு . இக்ரம்-க்கு வழங்கி பாராட்டினார்.