• தொழிலாளர் தினத்தன்று கிராம சபைக் கூட்டம்.

·        01.05.2025  வியாழக்கிழமை தொழிலாளர் தினத்தன்று வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, வேலுார் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் 01.05.2025 தொழிலாளர் தினத்தன்று காலை 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இக்கிராம சபைக்கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய  பொருள்கள் விவரம்.

பொருள் 1

:

கிராம ஊராட்சி மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல்

பொருள் 2

:

இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்.

பொருள் 3

:

சுய சான்றிதழினை அடிப்படையாகக் கொண்டு கட்டிட அனுமதி பெறுதல்.

பொருள் 4

:

வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைய வழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல்

பொருள் 5

:

இதர பொருட்கள்

மேற்படி,  கிராம சபைக் கூட்டங்களில் அனைத்துத் துறை உயர் அலுவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதை கண்காணிக்க ஒன்றிய அளவில் மண்டல அலுவலர்கள் நியமனம் செய்தும், சிறப்பு மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.