• வேலூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்.

·        வேலூர்  மாவட்ட மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் - மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் 537  கோரிக்கை மனுக்களை பெற்றார்.

                வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி  தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறைத் தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வருவாய்த் துறை நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை வேளாண்மைத் துறை, காவல் துறை. ஊரக வளார்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை. மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சனைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 537 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க  வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறை தீர்வு நாள் கூட்டத்தில் சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்து 09.12.2024 அன்று மாரடைப்பால் இறந்த வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மேல்வடுகன்குட்டை, கரசமங்கலத்தை சேர்ந்த சரவணன் என்பவரின் சட்டபூர்வ வாரிசுதாரரான ராஜேஸ்வரி என்பவரிடம் இறப்பிற்கான இழப்பீட்டு தொகை ரூ.1,24,97,987/-க்கான (ஒரு கோடியே இருபத்து நான்கு இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி ஏழு மட்டும்) காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

மேலும் நடைப்பெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பேட்டரியால் இயங்கும் 3 சக்கர மிதிவண்டி கோரி மனு அளித்த மாற்றுத் திறனாளியின் மனுவின் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி ரூ.68,000/- மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் 3 சக்கர மிதிவண்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பாபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நீ.செந்தில்குமரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மதுசெழியன்,  தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்முல்லை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

• வேலூரில் டெய்ட்கோ ஃபவுண்டேஷன் 4-வது மாநில மாநாடு.

• பெ.தெ.லீ கல்லூரியில் இயந்திரவியல் துறை கருத்தரங்கம்.

• P.T. Lee கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா.